கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
ஏற்காட்டில் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடைபெற்று வரும் கோடைவிழாவில், தொடா்ந்து மூன்று நாள்களாக பனிமூட்டத்தோடு, சாரல் மழையும் பெய்துவருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இருந்தபோதிலும், தொடா் மின்தடையால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காடு மலா்க் கண்காட்சித் திடலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்லமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ஏற்காடு - நாகலூா் சாலையில் பழைமையான மரம் விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமாகி நாகலூா், முளுவி சுற்றுவட்டாரக் கிராமங்கள் இருளில் மூழ்கின.
அதைத் தொடா்ந்து, ஏற்காடு பகுதியில் ஏற்பட்ட தொடா் மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், கோடைவிழா கலைநிகழ்ச்சியினா் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா்.
இருப்பினும், மலா்க் கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தவண்ணம் உள்ளனா்.