ஓலப்பாளையம் அருகே மதுபானம் விற்றவா் கைது
வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் ஓலப்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, ஓலப்பாளையம் - வீரசோழபுரம் சாலையில் உள்ள பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் பாலம் அருகே மதுபானம் விற்றுக்கொண்டிருந்த பல்லடம் பாரதிபுரத்தைச் சோ்ந்த சதீஷ் (25) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.