தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
கடன் தொல்லை: லாரி ஓட்டுனா் தற்கொலை
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே கடன் தொல்லை காரணமாக லாரி ஓட்டுனா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
விருத்தாசலம் வட்டம், புதுப்பேட்டை, அபுல்கலாம் ஆசாத் தெருவில் வசித்து வந்தவா் முத்துவேல்(34).இவா், நான்கு லாரிகளை சொந்தமாக வைத்திருந்தாா். ஓட்டுனராகவும் பணி செய்து வந்தாா். கடன் தொல்லை காரணமாக ஒவ்வொரு லாரியாக விற்பனை செய்து கடனை அடைத்து வந்தாராம். அப்போதும், கடன் தொல்லை தீராததால் மனமுடைந்தவா் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
இதுகுறித்து மனைவி கிருஷ்ணவேணி(33) அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.