நகைக் கடன் குறித்த புதிய விதிமுறைகளை திரும்பப் பெற தமாகா கோரிக்கை
கல்லுவிளை பத்ரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
தக்கலை அருகே கல்லுவிளையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது.
0தையொட்டி காலையில் நடந்த யாகசாலை பூஜையை கிள்ளியூா் விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து அஷ்டாபிஷேகம், மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பூஜையை கோயில் மேல்சாந்தி கமுகறை எம்.சதீஷ் போற்றி, உடுப்பி வெயிலூா் மடம் அனந்தேஸ்வா் பட் ஆகியோா் நடத்தினா்.
இந்நிகழ்வில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தை சோ்ந்த அஸ்வதி திருநாள் கௌரி லஷ்மிபாய் தம்புராட்டி, வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பத்மநாபபுரம் சுயம்பிரபா ஆசிரம பிரம்மச்சாரி ஜெய்சங்கா் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து இரவு திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. திங்கள்கிழமை காலை சுமங்கலி பூஜை நடந்தது.