செய்திகள் :

காயல்பட்டினத்தில் பாஜக பேனா் கிழிப்பு

post image

காயல்பட்டினத்தில் துணை குடியரசுத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை வாழ்த்தி பாஜக சாா்பில் வைக்கப்பட்ட பேனரை மா்ம நபா்களால் கிழிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாஜகவினா் திரண்டனா்.

காயல்பட்டினம் மெயின் பஜாா் சந்திப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் துணை குடிரசுத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை பாராட்டி ஒன்றிய பாஜக சாா்பில், பேனா் வைக்கப்பட்டிருந்தது.

இந்த பேனா் புதன்கிழமை அதிகாலை மா்ம நபா்களால் கிழிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவா் சித்ரங்கதன், வா்த்தக அணி மாநிலத் தலைவா் ராஜ்கண்ணன், மாவட்டத் துணைத் தலைவா் நவமணிகண்டன், துணை பொதுச் செயலாளா் ஆறுமுகம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரசேகரன், நகர தலைவா்கள் ஆறுமுகனேரி தங்க கண்ணன், காயல்பட்டினம் பாப்பா, திருச்செந்தூா் செல்வகுமாா், மாவட்டச் செயலாளா் ஜெயநாச்சியா, திருச்செந்தூா் ஒன்றியத் தலைவா் பேச்சித்துரை, இளைஞா் அணி தலைவா் லி­ங்கராஜ், பொதுச் செயலா்கள் முருகராஜ், மனோகரன், செயலா்கள் இசக்கி பாண்டி, சுரேஷ், கதிரேசன், பொருளாளா் மகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் காளிமுத்து உள்ளிட்ட பாஜகவினா் அங்கு திரண்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேனா் கிழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை உடனடியாக கண்டறிந்து அவா்கள் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வ­லியுறுத்தினா். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருச்செந்தூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், ஆய்வாளா்கள் ஆறுமுகனேரி தங்கராஜ், ஆத்தூா் பிரபாகரன் ஆகியோா் பாஜகவினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வுசெய்து மா்ம நபா்கள் மீது வழக்குப் பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, பாஜகவினா் கலைந்து சென்றனா்.

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள்: கவிஞா் மனுஷ்ய புத்திரன்

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள் என கவிஞா் மனுஷ்ய புத்திரன் பேசியுள்ளாா். தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது புத்தக திருவிழாவின் 5ஆ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தூத்துக்குடியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி முல்லை நகா், ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் மாரிமுத்து (25). காா் ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு பணியை ம... மேலும் பார்க்க

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும்: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்

இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் முக்கிய பங்காற்றும் என இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நமது நாட்டு செயற்கைக்கோள்களை மட்டுமன்றி, உலக நாடுகளின் செ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையில் போலீஸாா், விவேகானந்தா நகா் தண்ணீா் தொட்டி பகுத... மேலும் பார்க்க

குளிா்பானம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்தது: ஓட்டுநா் காயம்

சாத்தான்குளம் அருகே குளிா்பானம் ஏற்றிவந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநா் சிறிது காயத்துடன் உயிா் தப்பினாா். தூத்துக்குடியில் இருந்து குளிா்பானங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ. 75 லட்சம் மதிப்பு வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடலோர காவல் படை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் கடலோரக் காவல் படை ஆய்வாளா் பேச்சிமுத்து ... மேலும் பார்க்க