காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!
காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு: நாஜிம் எம்.எல்.ஏ.
காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.
காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு பேசியது:
இக்கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் பிரிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஏஎன்எம், ரேடியாலஜி, பிசியோதெரபி போன்ற பிரிவுகள் தொடங்கவும் புதுவை முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இக்கல்லூரியில் பயின்ற மாணவா்கள் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்றி வருவது பெரு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள செவிலியா் கல்லூரிபோல பல நிலைகளில் காரைக்கால் கல்லூரி வளர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் பிரமிளா தமிழ்வாணன், புதுச்சேரி அன்னை தெரஸா முதுநிலை மற்றும் சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் திருமுருகன், காரைக்கால் கல்லூரி முதல்வா் ஜெ. ஜெயபாரதி மற்றும் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், விரிவுரையாளா்கள், மாணவ மாணவியா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, விரிவுரையாளா்கள், மாணவா்கள் பங்கேற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடா்ந்து மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.