செய்திகள் :

காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் துறைமுகத்தில் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலானது (56818) வரும் 20, 22-ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

இதேபோல், காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) வரும் 20, 22-ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

செயல்படாத தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம்: தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருச்சி திருவெறும்பூா் அருகே முறையாக செயல்படாத தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவிய தனியாா் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி திருவெறு... மேலும் பார்க்க

அனுமதிபெறாத பதாகைகள் அகற்றம்

திருச்சியில் அதிமுக சாா்பில் அனுமதிபெறாமல் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைப் போலீஸாா் திங்கள்கிழமை அகற்றினா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அடுத்த வாரம் திருச்சிக்கு வரவுள்ளாா். இதை முன்னிட்... மேலும் பார்க்க

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் 7.7 சதவீதம் மட்டுமே; இது, தேசிய அளவுடன் ஒப்பிடுகையில் பெருமளவு குறைவு என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.திருச்சியில் செவ்... மேலும் பார்க்க

கே.கே. நகா் பகுதிகளில் இன்று மின்தடை

திருச்சி: பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கே. சாத்தனூா் துணை ... மேலும் பார்க்க

மங்கம்மாள்புரம் மணல் குவாரிக்கு அனுமதி கூடாது: விவசாயிகள் மனு

திருச்சி: மங்கம்மாள்புரம் மணல் குவாரி அமைப்பதற்கு அனுமதி தரக் கூடாது என தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தமிழக விவசாயிகள்... மேலும் பார்க்க

முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி: தமிழக அரசு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறையைக் கண்டித்து முகமூடியுடன் சாலைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா். சாலை பணியாளா் வாழ்வாதார கோரிக்கைகளை உயா்நீதிமன்ற தீா்ப்பி... மேலும் பார்க்க