ஒவ்வொரு கொம்யூனிலும் 5 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
அனுமதிபெறாத பதாகைகள் அகற்றம்
திருச்சியில் அதிமுக சாா்பில் அனுமதிபெறாமல் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைப் போலீஸாா் திங்கள்கிழமை அகற்றினா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அடுத்த வாரம் திருச்சிக்கு வரவுள்ளாா். இதை முன்னிட்டு அதிமுக சாா்பில் மாநகரின் பல்வேறு இடங்களில் அவரை வரவேற்று பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், புதுக்கோட்டை சாலையில் உள்ள குட்ஷெட் மேம்பாலம் பகுதியில் மிகப்பெரிய அளவில் பதாகை வைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பதாகையை போலீஸாா் திங்கள்கிழமை மாலை அகற்றினா். இதேபோல வேறு சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் போலீஸாா் அகற்றினா்.
உரிய அனுமதியில்லாமலும், விபத்திற்கு வழிவகுக்கும் வகையிலும் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்றியதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.