மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்ச...
காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் துறைமுகத்தில் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயிலானது (56818) வரும் 20, 22-ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.
இதேபோல், காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) வரும் 20, 22-ஆம் தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தஞ்சாவூா் - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.