கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாடு உயிருடன் மீட்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டு மாட்டை கிரேன் மூலம் வனத் துறையினா், தீயணைப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்டனா்.
கொடைக்கானல் அருகேயுள்ள பாத்திமா மாதா குடியிருப்புப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் மூடப்படாத 50-அடி கிணற்றில் காட்டு மாடு தவறி விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கொடைக்கானல் வனச் சரகா் பழனிக்குமாா் தலைமையிலான வனவா்களும், தீயணைப்புத் துறையினரும் பொக்லைன் இயந்திரம், கிரேன் மூலமும் பல மணி நேரம் போராடி காட்டு மாட்டை உயிருடன் மீட்டனா். பின்னா், அந்த மாடு அருகிலுள்ள வனப் பகுதியில் விடப்பட்டது.