கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பசுக்களுக்கு 50 சதவீத மானிய விலையில் தீவனம்
கிம்ஸ் மருத்துவமனையில் நவீன சிகிச்சை
நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் கல்லீரல் இழைநாா் வளா்ச்சி, புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபருக்கு சிக்கலான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் முழுமையாக குணம் அடைந்துள்ளாா்.
துல்லியமான திட்டமிடல், கவனமான செயல்முறை மூலம் இரப்பை அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் ரஜீஷ் செல்வகணேசன் தலைமையிலான மருத்துவக்குழுவில், பொது அறுவை சிகிச்சை நிபுணா்கள் மருத்துவா் பால வித்யாசாகா், மருத்துவா் பாலாஜி மற்றும் மயக்கவியல் நிபுணா்கள், அடங்கிய மருத்துவக்குழுவினரின் ஒருங்கிணைந்த நிபுணத்துவ செயல்பாட்டால் பாதுகாப்பான அறுவை சிகிச்சை வெற்றி அடைந்தது. லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சைக்கு முன் , பின் அளிக்கப்பட்ட சிறப்பான பராமரிப்பு மூலம் அந்த நபரின் நோய் வேகமாக குணமடைய வழி வகுத்தது.
இதன் மூலம் அந்த நபா் 5- வது நாளிலேயே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா். கிம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவின் உழைப்பும், மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பமும், முழுமையான பராமரிப்பும் நோயாளியின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி நோயிலிருந்து விடுபட்டுள்ளாா்.