செய்திகள் :

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

post image

இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் சம்பந்தமான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், குடியுரிமை பெறுவதற்கு முன்பே, வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றிருப்பதாக பாஜக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சட்டத்துக்கு புறம்பாக இந்திய வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு அவர் இத்தாலி குடிமகளாக இருந்தபோது, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளது.

அந்த சமயத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ இல்லமான 1, சஃப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தனர். அந்த முகவரியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலில், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி பெயர்கள் இருந்தன. 1980 ஆம் ஆண்டு தில்லி நாடாளுமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்ட போது, வாக்குச் சாவடி 145, எண் 388 இல் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை உள்ள ஒருவரே வாக்காளராக இருக்க முடியும், இது சட்ட மீறலாகும். 1982 ஆம் ஆண்டு இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, அவரது பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் 1983 இல் சேர்க்கப்பட்டது.

அப்போதும் பிரச்னை எழுந்தது. சோனியா காந்திக்கு ஏப்ரல் 30, 1983 ஆம் தேதிதான் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால், ஜனவரி 1, 1983 தேதியின்படி, திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் வாக்குச் சாவடி 140, எண் 236 இல் இடம்பெற்றிருந்தது.

குடியுரிமை பெறுவதற்கு முன்னதாகவே, இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பின்னர், இந்திய குடியுரிமையை ஏற்க சோனியா காந்திக்கு 15 ஆண்டுகள் ஆனது ஏன்? என்றுகூட நாங்கள் கேட்கவில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமித் மால்வியா வெளியிட்ட படம்.

The BJP has questioned the inclusion of senior Congress leader Sonia Gandhi's name in the voter list three years before she obtained Indian citizenship.

இதையும் படிக்க : வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியி... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்

வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தியா சற்று பிடிவாதமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசண்ட் தெரிவித்தாா். ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் பேட்டியளித்தபோது, அக்டோபா் மாதத்துக்குள் அனைத்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா்களை ராணுவ வீரா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக ராணுவ ... மேலும் பார்க்க

இரண்டு வாக்காளா் அட்டை: பாஜக பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

பிகாரில் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருக்கும் பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைப... மேலும் பார்க்க

லாரி - வேன் மோதல்: உ.பி.யைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் தெளசா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பக்தா்கள் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா். இது தொ... மேலும் பார்க்க

1.4 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.36 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க