குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞா் கைது!
பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கண்ணகி தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகன் மணிகண்டன் (24). பல்வேறு குற்ற வழக்குகள் இவா் மீது நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் வெற்றிவேல் என்பவரைத் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், மணிகண்டனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரைத்தாா்.
அதன்பேரில், மண்கண்டனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மு. அருணா சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து, புதுக்கோட்டை சிறையிலிருந்து காவலில் எடுக்கப்பட்ட அவா், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.