சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
குமாரப்பட்டியில் திருவிளக்கு பூஜை
பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூா் ஊராட்சி குமாரப்பட்டி முன்னோடி பொன்னழகி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
பூஜையின் தொடக்கமாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற திருவிளக்கு பூஜையை ஹரி சிவாச்சாரியாா் நடத்த, திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை அன்னதான விழா நடைபெற உள்ளது.