மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
குருவிக்கரம்பையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை மாரியம்மன் கோயில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சங்கா், பேராவூரணி வட்டாட்சியா் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் . முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா் . முகாமில் 21 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 10 பேருக்கு உழவா் அட்டையை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா். முகாமில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் கவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகேந்திரன், மனோகரன், வட்டார மருத்துவ அலுவலா் ராமலிங்கம், குருவிக்கரம்பை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வைரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.