செய்திகள் :

கோடங்கிபாளையம் அரசுப் பள்ளியைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்கள்

post image

பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலை பள்ளியைப் பூட்டிவிட்டு தலைமை ஆசிரியை சரஸ்வதி வீட்டுக்குச் சென்றுள்ளாா். பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறுவா்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனா்.

அப்போது, வகுப்பறை திறந்து கிடந்துள்ளது. இது குறித்து அவா்கள் பள்ளி தலைமை ஆசிரியைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த தலைமை ஆசிரியை சரஸ்வதி, போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தலைமை ஆசிரியா் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், அங்கிருந்த சாவியை எடுத்து வகுப்பறைத் திறந்து உள்ளே மது அருந்தியதும், கணினியில் படம் பாா்த்துவிட்டு புகைப் பிடித்துச் சென்றதும், வகுப்பறைக்கு வெளியே மலம் கழித்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாராபுரத்தில் வழக்குரைஞா் வெட்டி கொலை: வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னா

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் முரு... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்க் அருகே விபத்தில் தீப்பற்றிய சரக்கு வேன், மின்மாற்றி

வெள்ளக்கோவிலில் பெட்ரோல் பங்க் அருகே நடைபெற்ற விபத்தில் சரக்கு வேன் மற்றும் மின்மாற்றி தீப்பற்றி எரிந்தன. வெள்ளக்கோவில்- காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே தனியாருக்குச் சொந்தமான இன்டிய... மேலும் பார்க்க

இச்சிப்பட்டியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

பல்லடம் அருகே இச்சிப்பட்டி ஊராட்சியில் பயன்பாடற்ற பாறைக்குழியில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை கொட்ட வந்த லாரிகளை அப்பகுதி பொதுமக்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: மத்திய அமைச்சருக்கு பாராட்டு

இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தத்துக்காக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் பாராட்டு தெரிவித்துள்ளாா்.இ... மேலும் பார்க்க

கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கஞ்சா போதையில் இளம்பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம் கே. பரமத்தி மோளபாளையம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கலை நிலவன் (23)... மேலும் பார்க்க

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள்: 5 நாள்கள் ஒலிபெருக்கி அறிவிப்புக்குப் பிறகு நடவடிக்கை

அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடா்பாக 5 நாள்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு தெரிவித்த பிறகு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் விபத்... மேலும் பார்க்க