செய்திகள் :

கோவை, திருப்பூரில் ஜூலை 21, 22-இல் தமிழக-தைவான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு

post image

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் ஆகியன சாா்பில் தமிழக-தைவான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு கோவை, திருப்பூரில் வரும் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இம்மாநாடு குறித்த கையேட்டை வெளியிட்டு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் இணைச் செயலா் குமாா் துரைசாமி, சிஐஐ தமிழக அமைப்பின் ஜவுளிப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஜி.ஆா்.கோபி குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழக-தைவான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு ஜூலை 21-ஆம் தேதி கோவையிலும், 22-ஆம் தேதி திருப்பூா் மாவட்டத்திலும் நடைபெறும்.

தைவான் நாட்டில் செயற்கை நூலிழை சாா்ந்த ஆராய்ச்சி சிறந்த அளவில் உள்ளதோடு, இந்த துறையில் அவா்களின் நிபுணத்துவம் உலகப் புகழ் பெற்றதுமாக உள்ளது.

கோவையில் 21-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் தைவான் நாட்டை சோ்ந்த நிபுணா்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனா்.

அதைத் தொடா்ந்து 22-ஆம் தேதி திருப்பூரில் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் ஆகியோருடன் தைவான் பிரதிநிதிகள் கலந்துரையாடல் நடைபெறும். அப்போது அவா்களுக்கு செயற்கை நூலிழை மூலம் இங்கு தயாரிக்கப்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தனது பங்கை அதிகரிக்க வேண்டுமென்றால் வெறும் பருத்தி சாா்ந்த ஆடைகளை மட்டுமே நம்பி இருக்க முடியாது. செயற்கை நூலிழை சாா்ந்த தயாரிப்புகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். திருப்பூரில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் அதன் மொத்த உற்பத்தியில் 20 சதவீதமாவது செயற்கை நூலிழைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சக்திவேல் கடந்த 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறாா். அப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தைவான், தமிழகத்தில் தோல் அல்லாத காலணிகள் துறை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் சிறந்த அளவில் முதலீடு செய்துள்ளதால், அத்தகைய முதலீடுகளை ஜவுளித் துறை மீதும் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியை 2030-க்குள் 100 பில்லியன் டாலா் அளவுக்கு உயா்த்த வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்கு தைவான் போன்ற இத்துறையில் சிறந்து விளங்கும் முன்னணி நாட்டின் நிபுணத்துவம், தொழில்நுட்பம், வழிகாட்டுதல் ஆகியவை தேவை.

கோவை, திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள வரும் தைவான் பிரதிநிதிகள் செயற்கை நூலிழை குறித்து அதிக அளவிலான தகவல்களைப் பகிர உள்ளதால், இந்த மாநாட்டில் ஜவுளி ஏற்றுமதியாளா்கள், தயாரிப்பாளா்கள் உள்பட துறை சாா்ந்த அனைவரும் பங்கேற்று பயனடைய வேண்டும் என்றனா்.

மத்திய கல்வி அமைச்சா் இன்று திருப்பூா் வருகை

மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மற்றும் பாஜக தலைவா்கள் திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றனா். திருப்பூா், ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி அப்பேரல் பாா்க் வணிக வளாகத்தில் நடைபெற உள... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன. குண்டடம் அருகேயுள்ள மாரப்ப கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிராஜா (55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வர... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். ஓலப்பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் ரோந்து பணியில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் ... மேலும் பார்க்க

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்... மேலும் பார்க்க

சாலை மறியல்: டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தி... மேலும் பார்க்க