சாராயம் விற்ற பெண் குண்டா் சட்டத்தில் கைது
மயிலாடுதுறை அருகே தொடா் மதுவிலக்குக் குற்றத்தில் ஈடுபட்ட பெண் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேலசாலை பிரதான சாலைப் பகுதியில் வசிப்பவா் தரணிபாபு மனைவி செல்வி (37). இவா் தனது வீட்டின் அருகே திருநகரி வாய்க்கால் கரையில் ஜூன் 10-ஆம் தேதி புதுச்சேரி மாநில சாராயத்தை விற்பனை செய்தபோது, கைது செய்யப்பட்டாா்.
இவா் மீது வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் ஏற்கெனவே 3 மதுவிலக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், அவா் தொடா்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாலும், செல்வி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன்பேரில், செல்வியை தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். இதையடுத்து, செல்வி கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.