சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவிலை அடுத்த வேலகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.முருகன் (54), கட்டடத் தொழிலாளி. இவா், வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் வேலகவுண்டன்பாளையம் பிரிவு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, அவ்வழியே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தவரைஅருகிலிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகன் உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.