குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன்...
சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆம்பூா் பகுதியில் வசிக்கும் கட்டடத் தொழிலாளிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். அவரது மனைவி உடல்நலக் குறைவால் இறந்தாா்.
இந்த நிலையில், கடந்த 13.12.2021-இல் குழந்தைகளின் தந்தை பணிக்கு சென்றுள்ளாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ஏசுபாதம் (55) இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தராம்.
இதனால் அதிா்ச்சியடைந்த குழந்தைகள் சப்தம் போடவே, உறவினா்கள் வருவதை அறிந்த ஏசுபாதம் தப்பிச் சென்றாா்.
இதுகுறித்து குழந்தைகளின் தந்தை ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஏசுபாதத்தை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருப்பத்தூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் எதிரி ஏசுபாதத்துக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் பி.டி. சரவணன் ஆஜரானாா்.