செய்திகள் :

``சிறையில் உயிர்வாழ முடியாது; விஷம் கொடுங்கள்'' - நடிகர் தர்ஷன் வாதம்; நீதிபதி கொடுத்த உத்தரவு

post image

பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Darshan Thoogudeepa - நடிகர் தர்ஷன்
Darshan Thoogudeepa - நடிகர் தர்ஷன்

அதில், ``ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவர் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் அவர் சட்டத்துக்கு கட்டுப்பட்டவரே.

நடிகர் தர்ஷன் உடனடியாக சரணடைய வேண்டும். அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

நடிகர் தர்ஷன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறைக்குள் சலுகைகளைப் பெறுவது தொடர்பாக ஏதேனும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வந்தால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என அதில் குறிப்பிட்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் தர்ஷன் நேற்று சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் 64-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது தர்ஷன் நீதிபதியிடம், "பல நாள்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் என்னால் உயிர் வாழ முடியாது. தயவுசெய்து எனக்கு விஷமாவது கொடுங்கள்” என்றார்.

அதற்கு நீதிபதி, "அப்படியெல்லாம் செய்யமுடியாது. தர்ஷனுக்கு படுக்கை, தலையணை வழங்குங்கள், சிறை விதிமுறைகளின்படி அவர் நடைபயிற்சி மேற்கொள்ளவும் அனுமதியுங்கள்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மயிலாடுதுறை: சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; குடிநீருக்கு அல்லாடும் மக்கள்.. நிலை மாறுமா?

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரிவேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தில் 30 ஆண்டுகள் பழைமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. பூங்குடியைச் சுற்றியுள்ள பெரியத்தெரு, காலனித்தெரு... மேலும் பார்க்க

Trump: ``எனது நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களு டன்... மேலும் பார்க்க

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வு

'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' எனச் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், 'அவ... மேலும் பார்க்க

``அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஏன்?'' -நிர்மலா சீதாராமன் பதில்

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவுஇது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். "இந்திய ரூபாய... மேலும் பார்க்க

ஏர்போர்ட் மூர்த்தி மீது நடந்த தாக்குதல்; "இதுதான் திராவிட மாடலா?"- நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி, ... மேலும் பார்க்க

எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" - அரசை விமர்சிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க