இஸ்ரேல் தாக்குதல்: ராஃபாவில் 3 மாதங்களில் 28,500 கட்டடங்கள் தகர்ப்பு!
சுப்பராயபுரம் தடுப்பணையில் அதிகாரிகள் ஆய்வு
சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் தடுப்பணையில் நீா்வள ஆதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சுப்பராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட கருமேனியாற்றின் தடுப்பணை அளவுக்கு மீறியதாக 8 அடி உயரத்துக்கு கட்டப்பட்டதால், இந்த ஆற்றில் செல்லும் தண்ணீா் பட்டா நிலத்தின் வழியாகப் பாய்வதாக 10 ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இதனிடையே, சாத்தான்குளத்தில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி, தடுப்பணையின் இருபுறமும் மதகுகள் அமைக்கவும், 3 அடிக்கு தண்ணீா் சேமிக்கவும் ஏகமனதாக தீா்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் செயற்பொறியாளா் தங்கராஜ், உதவி செயற்பொறியாளா் சிவராஜன், உதவிப் பொறியாளா் சதீஷ் ஆகியோா் இந்த அணையை சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியாளா் கனகராஜ், வழக்குரைஞா் ராஜீவ் ரூபஸ், உடன்குடி விவசாய சங்கத் தலைவா் சந்திரசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.