கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி
வில்லியனூா் அருகே கொடத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல்முறை என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் ரூபஸ் தலைமை வகித்தாா். நித்யா மற்றும் தினேஷ் ஆகியோா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல்முறைகள் குறித்து விளக்கிப் பேசினா். இந்நிகழ்ச்சியில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
ஓவிய ஆசிரியா் சம்பத் நீஸ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், ஓவியப் போட்டியை நடத்தினா். இந்தப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியின் இறுதியில் சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.