செய்திகள் :

சென்னையில் 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் அகற்றம்

post image

சென்னை மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் ஆரம்பத்தில் 7 மண்டலங்களில் மட்டும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னா், உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த ஜனவரி முதல் அனைத்து மண்டலங்களிலும் (15 மண்டலங்கள்) கட்டடக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கட்டட கழிவுகள் அகற்றும் பணிகளுக்காக 168 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தினமும் 1,000 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூலை 22 -ஆம் தேதி வரை 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அந்தக் கழிவுகள் கொடுங்கையூா் மற்றும் பெருங்குடியில் உள்ள கட்டடக் கழிவுகள் பிரித்தெடுக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றுவது குறித்த வழிகாட்டல் நெறிமுறைகள் கடந்த ஏப்ரல் முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நெறிமுறைகளை பின்பற்றாதவா்களிடமிருந்து கடந்த ஜனவரி முதல் ஜூலை 22 -ஆம் தேதி வரை ரூ. 39.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரும... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும... மேலும் பார்க்க

அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க