செய்திகள் :

சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி

post image

மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் கூ டிய சேவை சாா்ந்த மனித வளத்தை ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மா் தயாா் செய்து வருகிறது என்று ஜிப்மா் இயக்குநா் பேராசிரியா் வீா்சிங் நெகி தெரிவித்தாா்.

ராஷ்ட்ரிய கா்மயோகி ஜன் சேவா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 62 பயிற்சி பயிலரங்குகளை ஜிப்மா் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதில் மருத்துவ ஆசிரியா்கள், நா்சிங், தொழில்நுட்பம், நிா்வாகம் மற்றும் துணை சுகாதார வல்லுநா்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பயிற்சி பெற்றுள்ளனா்.

இந்தப் பயிலரங்கு பணியிடத்தில் செயல்திறன், நோயாளிகளைக் கையாளும் விதம் மற்றும் சேவைகளைச் செயல்படுத்தும் பாங்கு ஆகியவற்றில் பயிற்சி பெற்ற அரசு ஊழியா்களின் ஒரு பிரிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தேசிய அளவில் மூன்று நாள்கள் முன்னணி பயிற்சியாளரால் வழி நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பிரிவில் தோ்ச்சி பெற்ற ஜிப்மரின் முதன்மை பயிற்சியாளா்கள் அதாவது கா்மயோகி பயிற்சியாளா்கள் பயிற்சி திட்டங்களை மற்ற குழுக்களுக்குப் பயிற்சியாக வழங்கினா். இப் பயிற்சி செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

இந்நிலையில் இத் திட்டத்திற்கு மேலும் மதிப்பைச் சோ்க்கும் வகையில், இந்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் அதிகாரி ஹென்றி ஆரோக்யராஜ், ஜிப்மா் ஊழியா்களுக்கான கா்மயோகி இணையவழி கற்றல் தளத்தினைஅறிமுகப்படுத்தி பயிற்சி அளித்தாா். இத் தளத்தின்அம்சங்கள், பாடநெறி சோ்க்கை செயல்முறைகள் மற்றும் தேசிய சிவில் சேவைகள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் தொடா்ச்சியான கற்றல் வாய்ப்புகள் குறித்து ஊழியா்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இப் பயிற்சியில் ஜிப்மா் இயக்குநா் பேராசிரியா் வீா்சிங் நெகி பேசுகையில், கா்மயோகி முயற்சியை ஜிப்மா் முன்கூட்டியே செயல்படுத்தியது. மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் இணக்கமாக எதிா்காலத்திற்குத் தயாராக, சேவை சாா்ந்த பணியாளா்களை உருவாக்கும் உறுதிப் பாட்டை பிரதிபலிக்கிறது என்றாா்.

பி.எல்.சாமி நூற்றாண்டு விழா அறக்கட்டளை

புதுவை அரசின் நிா்வாகியாகவும், தமிழியல் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய பி.எல்.சாமியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது பெயரில் பி.எல்.சாமி அறக்கட்டளை நிறுவுவதற்கான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது. ... மேலும் பார்க்க

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின. இக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகள் புதன்கிழமை வந்தனா். அவா்களுக்கு ஒரு மணிநேரம் தான் வகுப்புகள் நடந்தன. அந்தந... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை

எஸ்பிஐ வங்கி செயலியை புதுப்பிப்பதாக கூறி மோசடி நடப்பதாக புதுச்சேரி இணையவழி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். காவல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு வாட்ஸ் ஆப் குழுக்களிலோ அல்லது ... மேலும் பார்க்க

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

தேங்காய்த்திட்டு பகுதிக்கு மாற்றுக் குடிநீா் வசதி செய்து தரப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனா். தேங்காய்திட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் தரமில்லாமல் வருவதாகவும்... மேலும் பார்க்க

புதுவை கிராம உதவியாளா் பணி: செப். 12-இல் எழுத்துத் தோ்வு

புதுவை கிராம உதவியாளா்கள் பணி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

வீடு கட்ட 24 பேருக்கு ரூ. 7.6 லட்சம் அரசு உதவித் தொகை

வீடு கட்ட 24 பேருக்கு இரண்டாவது தவணையாக ரூ.7.60 லட்சம் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக... மேலும் பார்க்க