செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.86.36 ஆக நிறைவு!

post image

மும்பை: ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.86.36 ஆக முடிவடைந்தது.

வரி குறித்த காலக்கெடு நெருங்கி வருவதால், இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து அனைவரும் காத்திருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பலவீனமான டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த மட்டங்களில் ஆதரவு நீடித்த நிலையில், தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் உள்நாட்டு பங்குகளில் எதிர்மறையான போக்குகள் ஆகியவற்றால் அதன் ஏற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.26 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.86.22 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.41 ஐ தொட்ட நிலையில், முடிவில் 5 காசுகள் குறைந்து ரூ.86.36-ஆக முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் குறைந்து ரூ.86.31 ஆக முடிந்தது.

இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 25,060.90 புள்ளிகளாகவும் சென்செக்ஸ் 82,186.81 புள்ளிகளாக நிறைவு!

Rupee pared initial gains and settled for the day down 5 paise at 86.36 against $ amid uncertainty over the US-India trade deal ahead of the August 1 deadline.

அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்த காரணம் என்ன?

புது தில்லி: தொழில்களில் நஷ்டம், கடன் என பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான 110 இடங்களில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது.யெஸ் வங்கியிடமிருந்து கடன் பெற்ற... மேலும் பார்க்க

கடும் சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ்!

புது தில்லி: வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை(ஜூலை 24) சென்செக்ஸ் கடும் சரிவுடன் முடிவடைந்தது.மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி இரண்டும் சரிவுட... மேலும் பார்க்க

செல்போனைவிட குறைவான எடையில் பவர் பேங்க்!

செல்போனைவிட குறைவான எடை கொண்ட பவர் பேங்க்கை அம்ப்ரேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.பவர் பேங்க், சார்ஜர், சார்ஜிங் வயர், இயர்போன், டிரிம்மர், ஹேர் டிரையர் போன்ற எலக்ட்ரிக் பொருள்களை தயாரிக்கும் இந்திய... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! 400 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,779.95 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.50 மணி நிலவரப்பட... மேலும் பார்க்க

குறைந்த விலை வீடுகளின் விற்பனை 32% சரிவு

இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் ரூ.1 கோடிக்கு குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை 2025-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்) 32 சதவீதம் சரிந்துள்ளது. அதே நேரம் ஆடம்பர வ... மேலும் பார்க்க

கார்வார் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

மும்பை: கர்நாடகாவை சேர்ந்த தி கார்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால், அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.இதன் விளை... மேலும் பார்க்க