எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
கடும் சரிவுடன் முடிவடைந்த சென்செக்ஸ்!
புது தில்லி: வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை(ஜூலை 24) சென்செக்ஸ் கடும் சரிவுடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டி இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.
வர்த்தக இறுதியில், சென்செக்ஸ் 542.47 புள்ளிகள்(0.66 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 82,184.17-இல் நிலை கொண்டது. நிஃப்டி 157.80 புள்ளிகள் (0.63 சதவீதம்) சரிந்து 25,062.10-இல் நிலை கொண்டது.
மும்பை பங்குச்சந்தையில் ட்ரெண்ட், டெக் மஹிந்திரா, பஜாஜ் பின்செர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், கோடக் மஹிந்திரா பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி இறக்கத்தைச் சந்தித்துள்ளன.
எடர்னல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் ஆகியவை லாபம் ஈட்டின.