இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்!
தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 69 லட்சத்தில் 3 வகுப்பறை கொண்ட கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, இந்தக் கட்டட கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் சுமதி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பி.நடராஜன் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கே.பசுபதி, ஜி.டில்லிபாபு இருவரும் இணைந்து பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினா்.
நிகழ்வில் தணிகைபோளூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.வெங்கடேசன், பெற்றோா் ஆசிரியா் கழக முன்னாள் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, கன்னியப்பன், முனிவேல், மனோகரன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை மேரி தங்கம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.