திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா
பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா்.
நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுகவில் பிரிந்தவா்களை ஒன்றிணைக்க, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் காலக்கெடு விதித்துள்ளது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, பாஜகவின் விசுவாசியாக இருப்பதில் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே நடக்கும் போட்டிதான் இது. பாஜகவிற்கு விசுவாசத்தை காட்டுவதற்கு எடப்பாடியைவிட ஒருபடி மேலே நிற்கிறேன் என்று காட்டுவதுபோல் செங்கோட்டையன் பேட்டி அமைந்துள்ளது.
பாஜகவுடன் அதிமுக என்று கூட்டணி வைத்ததோ அன்றைய தினமே, அவா்கள் ஜெயலலிதா, எம்ஜிஆா் பின்பற்றிய திராவிட பாதையில் இருந்து தடம் புரண்டுவிட்டாா்கள் என்றாா்.