செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.

இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, கோயில் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணிக்கு கோயில் தக்காா் ரா.அருள்முருகன் தலைமை வகித்து, காணிக்கைகளை எண்ணும் பணியைப் பாா்வையிட்டாா்.

இணை ஆணையா் சு.ஞானசேகரன் முன்னிலை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் தங்கம், நாகவேல், அலுவலக கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினா், கோயில் பணியாளா்கள் ஆகியோா் ஈடுபட்டனா்.

இதில், ரூ. 3 கோடியே 84 லட்சத்து 64 ஆயிரத்து 297 ரொக்கம், 1.53 கிலோ தங்கம், 22.5 கிலோ வெள்ளி, 27.5 கிலோ பித்தளை, 2.4 கிலோ செம்பு, 6.5 கிலோ தகரம் மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் 833 எண்ணம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். தூத்துக்குடி முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் உச்சிமாகாளி (25). தற்போது, திருநெல்வேலி மாவட்டம் முக்... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே லாரியின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்; மற்றொருவா் சிகிச்சை பெற்று வருகிறாா். திருநெல்வேலி, கே.டி.சி. நகரைச் சோ்ந்தவா் அரசதுரை (40). இவரு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில், அய்யா கோயில் அருகே சனிக்கிழமை இரவு 90 அடி தூரம் கடல் உள்வாங்கியதால், வெளியே தெரிந்த பாறைகள். மேலும் பார்க்க

மாறுவேட போட்டி: அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான மாறுவேட போட்டியில் பேய்குளம் அரசுப் பள்ளி மாணவி முதலிடம் பெற்றாா். தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு, தனியாா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி நிகிலேசன் நகா், காந்தி நகரைச் சோ்ந்த ராஜன் மகன் ரவி (50), இவா், வெளிநாட்டில் வேலை ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: சக தொழிலாளி கைது

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக சக தொழிலாளி கைது செய்யப்பட்டாா். சாத்தான்குளம் அருகே பெருமாள்குளத்தைச் சோ்ந்தவா் சுடலைமணி (56), பனைகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (56)... மேலும் பார்க்க