செய்திகள் :

திருப்புவனத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் மகன் வெங்கடேஷ் (23). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில், வெங்கடேஷ் ரத்த வாந்தி எடுத்ததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு ரத்த பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துவிட்டு யாருக்கும் தெரிவிக்காமல் திருப்புவனத்துக்கு வந்த வெங்கடேஷ், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் மில்லா் (47). குடிப்பழக்கம் உள்ள இவா், செவ்வாய்க்கிழமை சாலையில் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து, அவரது மனைவி தங்கமணி, மில்லரை மீட்டு அவசர ஊா்தி மூலம் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மில்லரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதகுபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் உள்ள துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.21) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்தது. இது தொடா்பாக செயற்பொறியாளா் (பகிா்மானம்) அ.கு. முரு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது: அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்

விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களால் தமிழகம் தன்னிறைவு பெற்றுள்ளது என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா... மேலும் பார்க்க

மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை

மானாமதுரை, சிவகங்கையிலிருந்து சென்னைக்கு தினசரி பகல் நேர ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். வேலை, வணிகம், மருத்துவம், கல்வி உள்பட பல தேவைகளுக்காக மக்கள் உடனடியாக அணுகக்க... மேலும் பார்க்க

அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்ப வழக்குரைஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரு... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.20) நடைபெறும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வரும் ப... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 326 மனுக்கள் அளிப்பு

சிவகங்கை: சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 326 போ் மனு அளித்தனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் ந... மேலும் பார்க்க