அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
திருப்பூரில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடி யாத்திரை
திருப்பூரில் பாஜக சாா்பில் மூவா்ணக் கொடி யாத்திரை புதன்கிழமை நடைபெற்றது.
பாஜக திருப்பூா் மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் வழிகாட்டுதலின்படி செரங்காடு மண்டல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக பொறுப்பாளா் மந்திராசலமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் அருண் மற்றும் மாவட்ட துணைத் தலைவா் கவிதாஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.
செரங்காடு காமாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் இருந்து மாநகராட்சி காந்தி சிலை வரை நடைபெற்ற இந்த யாத்திரையில் பங்கேற்ற அனைவரும் தேசியக் கொடி ஏந்தி, கதா் தொப்பி அணிந்து ஊா்வலமாகச் சென்றனா்.
இந்த நிகழ்வில் முன்னாள் மண்டல் தலைவா் அங்குராஜ், தொழில் பிரிவுத் தலைவா் சிவகுமாா் மற்றும் மண்டல் பொதுச் செயலாளா் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.