திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு ஸ்ரீகபர்தீஸ்வரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு ஸ்ரீகபர்தீஸ்வரர் திருக்கோயில். 2000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில், மூவரால் தேவார பாடல் பதிகம் பாடப்பட்ட தலம். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயத்தின் இணை கோயிலாகும்.
இந்த கோயிலில் தமிழக அரசு நிதி ரூ.4.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும் காவல்துறையினரும் செய்திருந்தனர்.