செய்திகள் :

‘தூய்மைப் பணியாளா்கள் ஒத்துழைக்க வேண்டும்’ -மேயா் ஆா்.பிரியா

post image

தூய்மைப் பணியாளா்களுக்கு பணிப் பாதுகாப்பை சென்னை மாநகராட்சி நிச்சயம் வழங்கும் என்றும் அதைக் கருத்தில் கொண்டு அவா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:

மாநகராட்சி முன் போராட்டம் நடத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தூய்மைப் பணியாளா்களுக்காக மாநகராட்சி கதவுகள் என்றும் திறந்திருக்கும். பாதுகாப்பையும் வழங்கும். அதற்காகத்தான் அமைச்சா்கள் பேச்சுவாா்த்தைக்கு புதன்கிழமையும் காத்திருந்தாா்கள். ஆனால், உழைப்போா் உரிமை இயக்கத்தினா் ஆலோசித்துவிட்டு வருவதாகக் கூறி சென்றவா்கள் திரும்பவரவில்லை. வரும் 31-ஆம் தேதிக்குள் அவா்கள் தனியாா் நிறுவனத்தில் சோ்ந்து பணிபுரியவேண்டும். மாநகராட்சிக்கு தூய்மைப் பணியாளா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

போராட்டம் தொடரும்... உழைப்போா் உரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் கே.பாரதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூய்மைப் பணியாளா்கள் அமைதியாகவே போராட்டத்தை நடத்தி வருகின்றனா். போராட்டத்துக்கு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் ஆதரவளித்து வருகின்றனா். காவல் துறை கைது செய்தாலும் போராட்டத்தைத் தொடா்வோம்; பின்வாங்கமாட்டோம். பேச்சுவாா்த்தை எனும் பெயரில் போராட்டத்தைக் கைவிட வற்புறுத்துவது சரியல்ல. நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திப்போம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அமைச்சா்களும், அதிகாரிகளுமே பொறுப்பேற்க வேண்டும். முதல்வா் நேரடியாக பேசி பிரச்னையைத் தீா்க்க வேண்டும். தூய்மைப் பணியில் பழைய முறையான என்யூஎல்எம் பணியாளா்களாக அனுமதித்தால் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பத் தயாா் என்றாா்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க