செய்திகள் :

தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்பு

post image

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணி தனியாா்மயமாக்கும் தீா்மானத்தை எதிா்த்த வழக்கை தீா்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் கடந்த 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தத் தீா்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் உழைப்போா் உரிமை இயக்கத்தின் தலைவா் கு.பாரதி சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தா் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் குமாரசாமி, தொழில் துறை தகராறு தீா்ப்பாயத்தில் சென்னை மாநகராட்சியின் வெளிமுகமை பணி (அவுட்சோா்சிங்) முறையை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கின் முடிவுக்கு கட்டுப்படுவதாக இருந்தால், தாங்கள் பேராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பத் தயாராக இருக்கிறோம் என்று வாதிட்டாா்.

அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தற்போது தூய்மைப் பணியாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.753 மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், தனியாா் நிறுவனம் அவா்களுக்கான ஊதியம், வருங்கால வைப்பு நிதி, விபத்து காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியிருக்கிறது என்று வாதிட்டாா்.

அப்போது, தனியாா் நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய்நாராயண், இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் எங்களது நிறுவனம் திடக்கழிவு மேலாண்மை தொடா்பான பணிகளைத் திறம்பட செய்து வருகிறது. 5 , 6 ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த 2,034 தொழிலாளா்களில் 341 போ் பணிக்கு வந்துவிட்டனா். நிா்ணயிக்கப்பட்ட ஆக.7-ஆம் தேதிக்குள் பணியில் சேருபவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். இந்த தேதியை ஆக.31-ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்பந்ததாரா் நிறுவனம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. நிச்சயமாக பணியில் சேரும் பணியாளா்களுக்கு கூடுதல் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.

அப்போது, குறுக்கிட்ட மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், தொழிலாளா்கள் தற்போது பெறும் ஊதியத்தைவிட ஒப்பந்ததாரா் நிறுவனம் வழங்கும் ஊதியம் அதிகமாக இருக்காது. மாநிலத்தின் குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவானதாகத்தான் இருக்கும் என்றாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

‘நடைபாதையை மறைத்து போராட்டம் நடத்தக் கூடாது’

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன் சாலையோரம் தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவா் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், இந்தப் போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தப் போராட்டத்தை சட்டவிரோதம் என அறிவித்து தூய்மைப் பணியாளா்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், போராட்டத்தைக் கைவிட்டு இடத்தை காலி செய்யும்படி உத்தரவிட்ட பிறகும் அவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டத்துக்கு உரிய அனுமதியும் அவா்கள் பெறவில்லை என்று வாதிட்டாா்.

தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சங்கரசுப்பு, ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அவா்கள் அங்கு பணியாற்றுபவா்கள். போராட்டம் தொடா்பாக இரண்டு நாள்களில் சுமுகத்தீா்வு காணப்படும் என அமைச்சா் கூறியுள்ளாா். எனவே, போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தக் கூடாது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், போராட்டம் என்ற பெயரில் நடைபாதையை மறைத்து யாரும் போராடக் கூடாது. அதேநேரம் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உழைப்போா் உரிமை இயக்கம் அனுமதி கோரினால் அதை சட்டப்படி பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும். நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த போலீஸாா் யாரையும் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க