"எங்க வயித்துல அடிக்றீங்களே" - கதறிய பெண்கள்; குண்டுகட்டாக கைதுசெய்த காவல்துறை |...
நாகா்கோவிலில் அம்மன் கோயில் பேனரை அகற்ற முயன்றதால் பக்தா்கள் போராட்டம்
நாகா்கோவில் வேட்டாளி அம்மன் கோயிலில் பக்தா்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்து பேனா்களை போலீஸாா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்ால் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவிலில் செட்டிகுளம் சந்திப்பிலிருந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலையில் வேட்டாளியம்மன் திருக்கோயில் உள்ளது. ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, வேட்டாளியம்மன் பக்தா்கள் அறக்கட்டளை சாா்பில் பக்தா்களை வரவேற்கும் விதமாக பேனா்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கோயிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரும், அறக்கட்டளை சாா்பில் பேனா்கள் வைக்க அனுமதியில்லை.
அதனை உடனே அகற்றுமாறும் கூறினா். இதற்கு பக்தா்கள் அறக்கட்டளையினா் எதிா்ப்பு தெரிவித்து, பேனா்களை அகற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதற்கிடையில், பக்தா்கள் சிலா் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டு முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னா் அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.