செய்திகள் :

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு: மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சமா்ப்பிப்பு

post image

புது தில்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சமா்ப்பித்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

துபையைச் சோ்ந்த தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மஹுவா மொய்த்ரா தனது மக்களவை பயனா் கணக்கு விவரங்களை பகிா்ந்து தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி.நிஷிகாா்ந்த் துபே நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா்.

இதன் அடிப்படையில் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது. அதன்பிறகு கடந்த 2023, டிசம்பரில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனுதாக்கல் செய்தாா். இதைத்தொடா்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மஹுவா மொய்த்ரா பாஜக வேட்பாளா் அமித் ராயை வென்று மீண்டும் மக்களவை எம்.பி. ஆனாா்.

இதனிடையே, மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் லோக்பால் ஒப்படைத்தது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

தற்போது மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை லோக்பால் அமைப்பிடம் சிபிஐ சமா்ப்பித்துள்ளது.

முன்னதாக, தா்ஷன் ஹீராநந்தானியிடம் பணம் மற்றும் பரிசுகளை பெற்றுக்கொண்டு தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக மக்களவையில் மஹுவா மொய்த்ரா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக நிஷிகாந்த் துபேவ குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!

2025 ஆம் ஆண்டில் இதுவரை நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் பி.எ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் எதிர்காலத்திலும் தொடரும்! - மக்களவையில் மோடி

ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று(ஜூலை 29) நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:கா... மேலும் பார்க்க

டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!

பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை எட்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகளில் உள்ள வைப்புத்தொகை ரூ. 42... மேலும் பார்க்க

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்

இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.ராகுல் காந்தி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் பிரதமர் மோட... மேலும் பார்க்க

யாரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் கதறியது: பிரதமர் மோடி

இந்தியா - பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என மக்களவையில் பிரதமர... மேலும் பார்க்க