கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், முன்னாள் அரசு வழக்குரைஞா் ஸ்ரீதரன், கணேஷ் பாபு மற்றும் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.