செய்திகள் :

பஞ்சாப்பில் அம்பேத்கர் சிலை உடைப்பு! காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்கு!

post image

பஞ்சாப்பில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் காலிஸ்தான் ஆதரவாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோஷியார்பூர் மாவட்டத்திலுள்ள நூர்பூர் ஜட்டான் என்ற கிராமத்தில் பக்‌ஷிராம் என்பவரது குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில், அம்பேத்கரின் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, உள்ளூர்வாசிகளால் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்தச் சிலையின் கைகள் உடைத்து சேதமாக்கப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அம்பேத்கர் சேனையின் பொதுச் செயலாளர் குல்வாந்த் சிங் பூனோ என்பவர் மஹில்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இத்துடன், அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதற்கு காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான குர்பட்வாந்த் சிங் பன்னுன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவரது தூண்டுதலினால், அவரது கூட்டாளிகள் சிலர் சிலையை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஹோஷியாபூர் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், குல்வாந்த் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் சட்டப் பிரிவு 298 (வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்தல் அல்லது தாக்குதல்) மற்றும் 61(2) (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு, கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் அவ்தார் சிங் கரிம்புரி, அம்மாநிலத்திலுள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, கடந்த சில நாள்களாக பஞ்சாப்பின் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பின்கோடுகளுக்கும் முடிவுரையா? வந்துவிட்டது டிஜிபின்!

கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசாரிக்க உத்தரவு!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கில், கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞா், 2 மூத்த மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். சட்டக் கல்லூரி மாணவி கூட... மேலும் பார்க்க

கட்டண உயர்வுக்குப் பிறகு அறிமுகமான ரயில் ஒன் செயலி! சிறப்புகள் என்னென்ன?

அனைத்து வகையான ரயில் பயண சேவைகளையும் வழங்கும் வகையில் ரயில் ஒன் என்ற புதிய செயலியை மத்திய அரசு இன்று (ஜூலை 1) அறிமுகம் செய்துள்ளது.ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, உணவு ஆர்டர் செய்ய, கருத்துகளைப் பதிவு... மேலும் பார்க்க

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா

தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்.பி.யின் ராஜிநாமா ஏற்பு!

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோராவின் ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார்.பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சஞ்சீவ... மேலும் பார்க்க

கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி ஜிஎஸ்டி: ராகுல் காந்தி!

ஜிஎஸ்டி என்பது பொருளாதார அநீதி மற்றும் கார்ப்பரேட்டின் மிருகத்தனமான கருவி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டு இன... மேலும் பார்க்க

சித்தராமையாவே முதல்வராக தொடருவார்! -டி.கே.சிவகுமார் திட்டவட்டம்

பெங்களூரு: ‘கர்நாடக முதல்வராக சித்தராமையாவே தொடருவார்’ என்று அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவகுமார் இன்று(ஜூலை 1) செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இ... மேலும் பார்க்க