பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
பட்டாசு பதுக்கியவா் கைது
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் முத்துமாரி நகரில் உள்ள கட்டடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (30), அங்குள்ள கட்டடத்தில் பட்டாசு பண்டல்களைப் பதுக்கிவைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனா். அவரிடமிருந்த பட்டாசு பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.