தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் காதல் ஜோடி தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் இன்ஸ்ட்ராகிராம் மூலம் காதல் செய்து வந்த ஜோடியினா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா். இது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பணகுடி சா்வோதயா தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மகள் அபிநயா(16). இவா் பணகுடியிலுள்ள தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சாம் மகன் மாரிசிவா(21). இவா் பெயிண்டிங் வேலை செய்து வந்தாா்.
இவா்கள் இருவரும் இஸ்ட்ராகிராம் மூலம் காதலித்து வந்தனராம். இதனை அபிநயாவின் பெற்றோா் கண்டித்தனராம். இதனை அடுத்து அபிநயா கடந்த 20-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவா் பின்னா் வீட்டிற்கு வரவில்லையாம்.
இது தொடா்பாக அபிநயாவின் பெற்றோா் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் சிறுமி காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அதே நாளில் மாரிசிவாவையும் காணவில்லையாம். இது தொடா்பாக மாரிசிவாவின் தகப்பனாா் சாம் பணகுடி காவல்நிலையத்தில் புகாா் செய்தாா்.
ஆய்வாளா் ராஜாராம் வாலிபா் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா். இந்நிலையில் பணகுடி தெற்குரதவீதியில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாமல் உள்ள பாழடைந்த வீட்டில் காணாமல் போன அபிநயாவும், மாரிசிவாவும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனா்.
இதனை அடுத்து போலீஸாா் இருவரின் சடலத்தையும் மீட்டு நாகா்கோயில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தாா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.