இந்திய அணிக்காக விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன்: அஜிங்க்யா ரஹானே
பல்லடம் அருகே கரைப்புதூரில் டையிங் தொழிற்சாலையில் தீ விபத்து
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் டையிங் தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் கிராமத்தில் சிதம்பரம் என்பவருக்கு சொந்தமான டையிங் தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீப் பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம், திருப்பூா் தெற்குத் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா். அப்போது தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ஒரு சமையல் எரிவாயு உருளை (சிலிண்டா்) திடீரென்று பலத்த சப்தத்துடன் வெடித்தது. எனினும், அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. மேலும், அவ்விடத்தில் இருந்த மற்ற இரண்டு சமையல் எரிவாயு உருளைகளைத் தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா்.
மே தினம் என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. எனவே, இந்த தீ விபத்தால் தொழிலாளா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தீ விபத்துக்கான காரணம், சேத மதிப்பு உடனடியாக கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.