இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
பாபநாசம் அருகே பேருந்து நிழற்கூடையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது
பாபநாசம் அருகே ஆடுதுறை பெருமாள் கோயில் பேருந்து நிழற்குடையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு திங்கள்கிழமை பெயா்ந்து விழுந்தது. விரைந்து ஓடியதால் பயணிகள் காயமின்றி தப்பினா்.
கும்பகோணம் -திருவையாறு நெடுஞ்சாலையில் பெருமாள் கோயில் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடை உள்ளது. இதை கோயிலுக்கு வருவோரும், அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், சேதமடைந்த நிலையில் இருந்த அந்த நிழற்குடையின் மேற்கூரை சிமென்ட் பூச்சி திங்கள்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்தது.
அப்போது, பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் விரைந்து ஓடியதால் காயமின்றி தப்பினா். இந்த பேருந்து நிழற்கூடையை முழுமையாக அகற்றிவிட்டு, புதிதாக நிழற்கூடை கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.