பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகளால் திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 17, 18, 21, 22 ஆம் தேதிகளில் பாலக்காடு - குளித்தலை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பணிகள் நிறைவடைந்ததும் குளித்தலை - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 17, 18, 21, 22 ஆகிய தேதிகளில் கரூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பணிகள் நிறைவடைந்ததும் கரூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.
கூடுதல் பெட்டி இணைப்பு: கோவை - மன்னாா்குடி இடையிலான கோவை செம்மொழி விரைவு ரயில்களில் (16616, 16615) வரும் ஆகஸ்ட் 1 முதல் கூடுதலாக ஒரு படுக்கை பிரிவு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ரயிலானது 23 பெட்டிகளுடன் இயக்கப்படும்.