Wayanad: ஓராண்டல்ல, நூறாண்டைக் கடந்தாலும் ஆறாது இந்த ரணம் | வயநாடு நிலச்சரிவு
பிரதமரின் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: அமைச்சா் மனோ தங்கராஜ்
பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக பயணம் தமிழா்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
தக்கலையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சோழா்கள் பற்றியும், தமிழா்கள் பற்றியும் பெருமை பேசும் பிரதமா், உலகமே அங்கீகரிக்கும் கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கிறாா். தமிழகத்துக்கு தரவேண்டிய கல்வி நிதியை தரவும் மத்திய அரசு மறுக்கிறது.
மக்களை கவரும் வகையில், பேசுவதால் மட்டும் எந்த பயனும் ஏற்படாது. மொத்தத்தில் பிரதமரின் தமிழக பயணம், தமிழக மக்களின் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாா் அவா்.