மேற்கு வங்கத்தில் சட்டவிரோத குடியேற்றம்: 3 வங்கதேசத்தவா் கைது
பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்
சேலம்: பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பிகாரில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்காளா் அதிகார யாத்திரை பேரணியின் போது, பிரதமா் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாா் குறித்து காங்கிரஸ் தலைவா்கள் அவதூறாக பேசியதாக சா்ச்சை எழுந்தது. இதைக் கண்டித்து, ஆளும் கட்சியினா் நடத்திய போராட்டத்தின் போது, பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டா்களுக்கு இடையே ஆங்காங்கே மோதலும் ஏற்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் மாநகா் மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ராகுல் காந்தியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், முன்னாள் தலைவா் சுரேஷ்பாபு, தேசிய பொதுக்குழு உறுப்பினா் அண்ணாதுரை, மாவட்ட பொறுப்பாளா் முருகேசன், துணைத் தலைவா் கல்லாங்காடு சரவணன், பொதுச் செயலாளா் பிரபாகரன் உள்பட கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.