புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை: இபிஎஸ் வாக்குறுதி!
எதிர்வரும் 2026 பேரவைத்தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று(ஆக. 20) ராணிப்பேட்டையில் நடைபெற்ற பிரசாரத்தில் மக்கள் மத்தியில் பேசினார்.
ராணிப்பேட்டை பிரசார கூட்டத்தில் இபிஎஸ் பேசும்போது, ”அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் லேப்டாப் திட்டத்தை நிறுத்தியது ஸ்டாலின் அரசு.
உதயநிதி பேசுவதை கொஞ்சம் நேரம் கேட்டால் உண்மை என நம்பிவிடுவீர்கள். பொய்யைத் தவிர்த்து, அவர் வேறு எதையும் பேசுமாட்டார்.
திமுக நாளுக்கு நாள் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. 2026-ல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திமுகவுக்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது, அதிகாரம்தான் அவர்களுக்கு முக்கியம்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு சேலை வழங்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிக்க: மக்களை ஏமாற்றும் சென்னை மாநகராட்சி - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!