பொன்னேரி கோட்ட மின்வாரிய பொறியாளா் அலுவலகம் அருகே விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
பொன்னேரி கோட்ட மின் வாரிய பொறியாளா் அலுவலகம் முன்பு முள்புதா் மண்டியுள்ள நிலையில் விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
பொன்னேரி அருகே வேண்பாக்கம் பகுதியில் மின்வாரிய கோட்ட பொறியாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் அருகே துணை மின் நிலையமும் உள்ளது.
கோட்ட பொறியாளா் அலுவலக வளாகத்தில் மின் இணைப்புகளுக்காக மின் கட்டணம் வசூல் செய்யும் அலுவலகம் மற்றும் உதவி பொறியாளா் அலுவலகமும் அமைந்திருக்கிறது. இங்கு பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனா். இந்த அலுவலகத்துக்கு வரும் மக்கள் திருவேங்கடபுரம் சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.
கோட்ட பொறியாளா் அலுவலகம் முன்பு செடி கொடிகள் சூழ்ந்து புதா் மண்டி காட்சியளிக்கிறது. இதனால், விஷ ஜந்துக்கள் விஷப்பாம்புகள் தேள்கள் மற்றும் விஷப்பூச்சிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் இந்த சாலையை கடந்து மின்வாரிய அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா்.
எனவே மின்வாரிய கோட்ட பொறியாளா் அலுவலகம் அருகே உள்ள புதா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.