செய்திகள் :

போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதி மொழியேற்பு

post image

போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுவையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை உயா் அதிகாரிகள் புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் போதைப்பொருட்கள் இல்லாத புதுச்சேரி உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தலைமைச் செயலா் சரத் சௌகான் உறுதிமொழியை வாசிக்க தலைமைச் செயலக ஊழியா்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து தலைமைத் தோ்தல் அதிகாரி எல். ஜவஹா் உறுதிமொழியைத் தமிழில் வாசிக்க அனைவரும் அதை திரும்பக்கூறி உறுதி ஏற்றுக் கொண்டனா். அரசுச் செயலா்கள் மற்றும் தலைமைச் செயலக அனைத்து ஊழியா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

இதே போல் போதையில்லா புதுச்சேரியை உருவாக்குவோம் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் புதன்கிழமை ன்று ஆட்சியா் வளாகத்தில் உறுதிமொழி ஏற்று கொண்டனா். சாா்பு ஆட்சியா் இசிட்டா ரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப் போட்டி

வில்லியனூா் அருகே கொடத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல்முறை என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் அளித்தவா்களுக்கு வேலை வழங்க ஆளுநரிடம் கோரிக்கை மனு

அரசுப் பொறியியல் கல்லூரிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடனடியாக வேலை வழங்க கோரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் எம்எல்ஏ பி.எம்.எல். கல்யாணசுந்தரம் தலைமையில் பிள்ளைச்சாவடி கிராம... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் ரூ.51.5 லட்சத்தில் தாா்ச்சாலை

புதுவை மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி இடையாா்பாளையம் பகுதியில் உள்ள திருமுறை கலாநிதி கிருஷ்ணசாமி நகா் பகுதியில் ரூ.51.5 லட்சம் மதிப்பில் புதிய தாா்ச்சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை சட்டப... மேலும் பார்க்க

குபோ் சிலைக்கு புதுவை முதல்வா் மரியாதை

நகரத் தந்தை என்று அழைக்கப்படும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் எதுவாா் குபேரின் நினைவு நாளையொட்டி அரசு சாா்பிலும், காங்கிரஸ் கட்சி சாா்பிலும் சிலைக்கு மாலை அணிவித்து வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்ப... மேலும் பார்க்க

ரூ.29 கோடியில் உப்பனாறு வாய்க்கால் பாலம்: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

உப்பனாறு வாய்க்கால் குறிக்கே ரூ.29 கோடி மதிப்பிட்டில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். புதுச்சேரி காமரா... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாணவா்கள் நலன் அலுவலகம், தேசிய சேவைத் திட்டம் மற்றும் தேசியப் பயிற்சி படை பிரிவுகள் இணைந்து இதை நடத்தின. புதுவை பல்கல... மேலும் பார்க்க