கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
மங்கள சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேகம்
பாட்டூா் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மங்கள சனீஸ்வர பகவான் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், தொழிலதிபா்கள் ஏ.பி. மனோகா், சின்னவரிகம் ஏ.இ.பாஸ்கரன், விஜய பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், மாதனூா் ஒன்றிய குழு உறுப்பினா் மகாதேவன், ஆம்பூா் நகர அதிமுக செயலாளா் எம். மதியழகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கன்றாம்பல்லி, துத்திப்பட்டு, பாட்டூா், வெங்கட சமுத்திரம், சின்னவரிகம், பெரியவரிகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் , ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.